பிக்பாஸ் 9 வருகையால் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றமா?.. இதோ வெளிவந்த விவரம்
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்படும் ஒரு ஷோ.
100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பல கேமராக்கள் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும். பரபரப்பின் உச்சமாக கடந்த 8வது சீசன் ஒளிபரப்பானது.
9வது சீசன் எப்போதும் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் வரும் அக்டோபர் 5ம் தேதி பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கவுள்ளது.
அதற்கான புரொமோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இந்த முறையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க உள்ளார்.
நேரம் மாற்றம்
பிக்பாஸ் நிகழ்ச்சி எப்போதுமே விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு தான் ஒளிபரப்பாகும், இந்த முறையும் அதே நேரத்தில் தான் ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்களின் நேரம் மாற்றம் நடக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி என்னென்ன தொடர் என்ற விவரம், இதோ, ஆனால் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.
ஆஹா கல்யாணம் (கிளைமேக்ஸ்)- 6 மணி, அதன்பின் பூங்காற்று திரும்புமா சீரியல்
6.30 சிந்து பைரவி
7.30 சின்ன மருமகள் ஆகிய தொடர்களின் நேரம் மாற்றம் என கூறப்படுகிறது.