கொரோனாவால் நிறுத்தப்படுமா பிக்பாஸ், நிகழ்ச்சியை சேர்ந்த பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டிலை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை பிரபல நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே EVP படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு ஒளிப்பதிவாளர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுகிறார். 17 நபர்களுக்கு தொற்று உள்ளதாகவும். ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.