பிக் பாஸ் ஜூலி வருங்கால கணவர் போட்டோ.. குக் வித் கோமாளி பிரபலம் தான்!

By Parthiban.A Dec 09, 2025 12:46 AM GMT
Report

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலம் ஆனவர் மரியா ஜூலியானா. நர்ஸ் வேலையை விட்டுவிட்டு அவர் பிக் பாஸ் ஷோவுக்கு அதன் பிறகு போட்டியாளராக கலந்துகொண்டார்.

பிக் பாஸில் அவர் கடும் ட்ரோல்களை தான் சந்தித்தார். அதற்காக வருடக்கணக்கில் அவரை ட்ரோல் செய்தனர். அது பற்றி அவரே பல முறை வருத்தமாகவும் பேசி இருக்கிறார்.

பிக் பாஸுக்கு பிறகு வந்த ட்ரோல்களையும் தாண்டி அவர் சில படங்கள், சீரியல்கள் என நடித்து வந்தார்.

பிக் பாஸ் ஜூலி வருங்கால கணவர் போட்டோ.. குக் வித் கோமாளி பிரபலம் தான்! | Bigg Boss Maria Juliana Engagement Mohamed Ikreem

நிச்சயதார்த்தம்

இந்நிலையில் ஜூலி சில தினங்களுக்கு முன் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் அதில் மாப்பிள்ளையின் முகத்தை மட்டும் வெளியில் காட்டவில்லை.

அது யார் என தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. ஜூலி தான் காதலித்து வந்த முகமது என்பவரை தான் நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்.

Mohamed ikreem தற்போது ஒரு event management நிறுவனத்தை நடத்தி வருகிறாராம். மேலும் அவர் விஜய்டிவி யின் குக் வித கோமாளி, ரெடி ஸ்டெடி போ போன்ற நிகழ்ச்சிகளிலும் ஷோ ஏற்பாட்டாளராக பணியாற்றி இருக்கிறார்.

CWCல் அவர் ஜூலி, பாலாஜி முருகதாஸ் உடன் இருக்கும் போட்டோவை பாருங்க. மேலும் ஜூலி உடன் அவர் இருக்கும் ஸ்டில்களும் தற்போது வைரல் ஆகின்றன. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US