சிபிக்கு முன் பணப்பெட்டியை எடுத்துச்சென்ற இரண்டு முக்கிய போட்டியாளர்கள் ! யார் யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இறுதிபோட்டியை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 5-ல் கடந்த வாரம் சஞ்சீவ் வெங்கட் வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே மீதம் உள்ள போட்டியாளர்களின் யார் அடுத்த வாரம் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் வந்துள்ளது.
மேலும் 12 லட்சம் பணப்பெட்டியை சிபி எடுத்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த எபிசோட் இன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதனிடையே இதற்கு முந்தைய சீசன்களில் இதேபோல் பணப்பெட்டி டாஸ்க்கில் கவின் மற்றும் கேப்ரியல்லா 5 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து சென்றனர்.

ஆனால் தற்போது சிபி கடந்த இரண்டு சீசன்களை விட அதிகமாக 12 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்து சென்றுள்ளார்.