புதிதாக ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ! ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய தகவல்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது, இதில் யார் பைனல்ஸ் வரை செல்வார் என்பதை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே தற்போது விஜய் டிவி-யின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக புதிதாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளனர்.
ஆம், Disney Hotstar-ல் மட்டும் ஒளிபரப்பாகவுள்ள அந்த பிக் பாஸ் OTT நிகழ்ச்சி 60 நாட்கள் நடக்கவுள்ளதாம்.
இதில் புதிய மற்றும் பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் பங்குபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சார்ய படுத்தியுள்ள நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.