அட்டகாசமாக உருவாக்கப்பட்டுள்ள பிக்பாஸ் புதிய சீசன் வீடு... போட்டோஸ் இதோ
பிக்பாஸ்
செல்போனுடனே இன்றைய மக்கள் வாழ்க்கை நடத்தும் காலகட்டத்தில் 100 நாட்கள் செல்போன் இல்லாமல் ஒரு ஷோ.
இது சொன்னதுமே என்ன ஷோ என நினைவுக்கு வந்திருக்கும், வேறென்ன பிக்பாஸ் தான். எந்த ஒரு பொழுதுபோக்கு விஷயமும் இல்லாமல் பரீட்சயமான சிலர், தெரியாதவர்கள் பலருடன் இந்த ஷோவின் வீட்டில் தங்கி விளையாட வேண்டும்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
புதிய சீசன்
விரைவில் தமிழில் பிக்பாஸ் 9வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது, போட்டியாளர்கள் இவர்கள் தான் என பல லிஸ்ட் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இந்த நிலையில் ஹிந்தியில் தொடங்கப்பட்டுள்ள பிக்பாஸ் 19வது சீசன் வீட்டின் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய சீசன் வீட்டின் சில போட்டோஸ் இதோ,