பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் வரும் வனிதா, ஓவியா, லாஸ்லியா.. வெளிவந்த 12 போட்டியாளர்களின் லிஸ்ட்
சின்னத்திரையின் சென்சேஷன் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
95 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5வில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதிலிருந்து தற்போது டாப் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி வாரத்திற்கு தேர்வாகியுள்ளார்கள்.
இந்நிலையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த பரிணாமமாக, பிக் பாஸ் ஓடிடி தமிழில் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நேரடியாக ஓடிடி தளத்தில் மட்டுமே ஒளிபரப்பாகும்.
70 நாட்கள் நடைபெற்றவிருக்கும் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியின், போட்டியாளர்களின் பட்டியல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அந்த பட்டியலில், வனிதா, லாஸ்லியா, ஓவியா, பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஹரிஷ் கல்யாண், ஜனனி, அனிதா, தர்ஷன், கவின், சனம் ஷெட்டி, ஷெரின், என 12 போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம், நிகழ்ச்சியில் யார்யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்று..