பிக் பாஸில் ரெட் கார்டு வாங்கிய பாரு - கம்ருதினுக்கு சம்பளம் வராதா? உண்மை இதுதான்
பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளும் வரிசைகட்டி வரும். இந்த வருடம் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 9ம் சீஸனும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
பிக் பாஸ் 9ம் சீசனில் இருந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பார்வதி மற்றும் கம்ருதீன் என இருவரும் வெளியில் அனுப்பப்பட்டனர்.

சம்பளம்
அவர்கள் ரெட் கார்டு வாங்கியதால் பிக் பாஸ் சம்பளம் வருமா வராதா என்கிற கேள்வி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஷோவுக்கு அக்ரிமெண்ட் போடும்போதே இது பற்றி தெளிவாக குறிப்பிட்டு இருப்பார்கள், ரெட் கார்டு காரணமாக வெளியில் சென்றால் சம்பளம் எதுவும் தரப்படாது என கூறப்படுகிறது. அதனால் பாரு மற்றும் கம்ருதினுக்கு சம்பள விஷயத்தில் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
