3 வருடம் லிவ்-இன் வாழ்க்கை.. திருமண தேதியை அறிவித்த பிக் பாஸ் பாவனி - அமீர் ஜோடி!
நடிகை பாவனி ரெட்டி சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக ஒருகாலத்தில் இருந்தவர். அவரது முதல் கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார்.
அங்கு அவரிடம் மற்றொரு போட்டியாளரான அமீர் லவ் ப்ரொபோஸ் செய்தார். அந்த ஷோவில் பாவனி அவரது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பிறகு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அவர்கள் ஜோடியாக டான்ஸ் ஆடிய நிலையில் அப்போது பாவனி காதலை ஏற்றுக்கொண்டார்.
அதற்கு பிறகு கடந்த மூன்று வருடங்களாக திருமணம் செய்யாமலேயே அவர்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.
திருமண தேதி
தற்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் தங்களது திருமண தேதியை ரொமான்டிக் வீடியோ வெளியிட்டு அறிவித்து இருக்கின்றனர்.
வரும் 2025 ஏப்ரல் 20ம் தேதி அவர்கள் திருமணம் நடைபெற இருக்கிறது. வீடியோவை பாருங்க.