தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள பிக் பாஸ் ராணவ்.. வைரலாகும் வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் 8 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த வாரம் நடைபெற்று முடிந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கில் ரயான் வெற்றிபெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் அவர் நேரடியாக பைனலுக்கு சென்றுள்ளார். தற்போது 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இதிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என உறுதியாக தெரியவில்லை.
தளபதி விஜய்யுடன் ராணவ்
பிக் பாஸ் 8 வைல்டு கார்டு போட்டியாளராக வந்தவர் ராணவ். இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், தளபதி விஜய்யின் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக மாஸ்டர் திரைப்படத்தில் பிக் பாஸ் ராணவ் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். அவர் நடித்த காட்சிகளை தொகுத்து வீடியோ ஒன்றை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
Young #Raanav in Master Movie
— Ahamed Inshaf (@InshafInzz) January 3, 2025
🖤#BiggBossTamil8 #BiggBoss8Tamil#Raanav𓃵 #ThalapathyVijay
pic.twitter.com/HGJL7E8jvI