ஜாலியோ ஜிம்கானா பாடலில் விஜய்யுடன் ஆடியிருக்கும் சின்னத்திரை பிரபலம்! செம சர்ப்ரைஸ்
பீஸ்ட் படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி இருக்கிறது. முதலில் வெளிவந்த அரபிக் குத்து பாட்டு பெரிய ஹிட் ஆன நிலையில் இரண்டாவது சிங்கிள் ஜாலியோ ஜிம்கானா வெளியானது. அதை விஜய் தான் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியான பாடல்
அந்த பாடல் ப்ரோமோஷனிலேயே இயக்குனர் நெல்சன் மற்ற காமெடி நடிகர்களை வைத்து கலாய்த்து இருப்பார். மேலும் விஜய் - பூஜா ஹெக்டே இருவரும் கூலாக டான்ஸ் ஆடி இருப்பார்கள்.
இந்நிலையில் இந்த பாடலில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் டான்ஸ் ஆடி இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது.
பிக் பாஸ் ராஜு
விஜய் டிவி சீரியல் நடிகரும், பிக் பாஸ் பிரபலமமுமான ராஜு தான் இந்த பாடலில் ஆடி இருக்கிறார். அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் விஜய்யை நேரில் சந்தித்து பற்றியும், அவரது கண்கள் பற்றி தளபதி பேசியதையும் ஒரு பேட்டியில் ராஜு கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தபிறகு ராஜு இனி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்த இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.
