பிக் பாஸ் ராஜூவா இது? அவரே இயக்கி நடித்த குறும்படம் இதோ
ஐந்தாவது சீசன் பிக் பாஸ் ஷோவில் ராஜு முன்னணி போட்டியாளராக இருந்து வருகிறார். அவர் டைட்டில் ஜெயிக்கவும் அதிகம் வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதற்கு முன் சீரியல் நடிகராக மட்டுமே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான அவர் தற்போது entertainer ஆக மக்களை கவர்ந்து இருக்கிறார்.
ராஜூ பிக் பாஸ் 5 தொடக்கத்தில் அவர் கல்லூரி காலத்தில் எடுத்த குறும்படம் ஒன்றை பற்றி பேசினார். அது அரைகுறையாக எடிட் செய்து திரையிட்டபோதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த விழாவுக்கு வந்து இருந்த பாரதிராஜா ராஜூவை பாராட்டி தள்ளினார் எனவும் கூறினார் .
அஅஅஆ என்ற அந்த குறும்படத்தில் ஒரு ஆண் ஒரு girlfriend வேண்டும் என யோசிக்கும் நிலையில் முதலில் ஒரு பெண்ணுடன் காதலில் விழுகிறார். அவர் சிகரெட் பிடிக்கிறார் என அந்த பெண் விட்டுச்செல்கிறார்.
இரண்டாவதாக காதலிக்கும் பெண் அவர் தண்ணி அடிக்கிறார் என விட்டு செல்கிறார். மூன்றாவது பெண் தானும் சிகரெட், தண்ணி என கெட்ட பழக்கங்களோடு இருந்தாலும் அவர் வேறு பெண்கள் பின்னாடி சுற்றுகிறார் என பிரேக்கப் செய்கிறார். அதன் பின் நான்காவதாக ஒரு பெண்னுடன் பழக அதில் தான் ஓர் ட்விஸ்ட் இருக்கிறது.