பிக் பாஸ் பிரபலம் ராஜுக்கு கொரோனாவா ! ட்விட்டரில் பரபரப்பு..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று முடிவடைந்தது.
இதில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ராஜு ஜெயமோகன் பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை தட்டி சென்றார். இவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் Space-ல் கலந்து கொண்டு பேசிய ராஜுவிடம் ரசிகர்களை எப்போது சந்திப்பீர்கள் என கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த ராஜு தான் தற்போது கொரோனாவுடன் இருப்பதாக கூறினார், பின்னர் இது குறித்து அவர் எதுவும் பேசியது போல தெரியவில்லை.
இதனால் குழப்பமடைந்த ரசிகர்கள் அவர் உண்மையிலே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளாரா, அல்லது கிண்டலாக சொன்னாரா என பேசிவருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை: விமான கட்டணங்கள் உயரும் அபாயம்: பிரிட்டிஷ் ஏர்வேஸ் எச்சரிக்கை News Lankasri