மோசமாக திட்டிய மன்சூர் அலிகான்! ராஜு இதனால் தான் இப்படி ஒரு முடிவெடுத்தாரா?
ராஜு
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்தவர் ராஜு. அதற்கு பிறகு அவருக்கு பல சினிமா வாய்ப்புகள் காத்திருக்கிறது என அப்போது செய்தி வந்தது. ஆனால் ராஜு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. மாறாக விஜய் டிவியின் 'ராஜு வூட்ல பார்ட்டி' என்ற ஷோவை நடத்த தொடங்கிவிட்டார் அவர்.
சமீபத்தில் அந்த ஷோவுக்கு கெஸ்ட் ஆக வந்த நடிகர் மன்சூர் அலிகான் ராஜூவை கட்டிவைத்து அடித்தார். சினிமாவில் சாதிக்கச்சொன்னால் இப்படி இங்கேயே இருக்கிறாயே என அவர் மோசமாக திட்டினார்.
வெளிநாட்டுக்கு சென்ற ராஜு
மன்சூர் அலிகான் திட்டிய பிறகு ராஜு தனது மனைவியை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்து போட்டோக்கள் வெளியிட்டு இருக்கிறார்.
மன்சூர் திட்டியதால் தான் இப்படி விஜய் டிவி ஷோவுக்கு லீவு விட்டுவிட்டு ராஜு வெளிநாட்டுக்கு கிளம்பிவிட்டாரோ என நெட்டிசன்கள் பேச தொடங்கிவிட்டார்கள்.