5ம் க்ளாசிலேயே பெயில், வாய்ப்பு தேடி அவமானப்பட்டேன்: பிக் பாஸ் ராஜு
பிக் பாஸ் 5ம் சீசன் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது போட்டியாளர்கள் ஒவ்வொருவராக தங்கள் சாதனையை கூறி வாக்கு கேட்கலாம் என சொல்லப்பட்டது.
அப்போது பேசிய ராஜு "நான் ஆரம்பகாலத்தில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடியபோது ஒரு கம்பெனிக்கு சென்று போட்டோ கொடுத்துவிட்டு அவர்கள் கூப்பிடுவதாக சொன்னார்கள். அதை அம்மாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டேன். அப்படி சொல்லி அனுப்பினால் வாய்ப்பே இல்லை என்று அர்த்தம் என பின்னர் தான் தெரியவந்தது."
"நான் ஐந்தாம் க்ளாஸிலேயே பெயில்.. 12ம் வகுப்பு வரை நான் பெயிலியர் லிஸ்டில் தான் இருப்பேன். எனக்கு ஓட்டு போடுங்கள் என கேட்க முடியாது, ஆனாலும் கேட்கச்சொல்லிவிட்டார்கள் என்பதால் கேட்கிறேன்" என சொல்லி ராஜு தன்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார்.