அதை மாத்திக்குறேன்.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் ரவீனா போட்ட முதல் பதிவு
பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரவீனா கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அவர் 91 நாட்கள் வீட்டில் இருந்த நிலையில் மணி உடன் எப்போதும் நெருக்கமாக இருக்கிறார், அவருக்கு ஆதரவாக விளையாடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வந்தது.
அவரது குடும்பத்தினர் கூட பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போது அவரை திட்டி தீர்த்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் எலிமினேட் ஆனார்.
எலிமினேஷனுக்கு பின் போட்ட பதிவு
இந்நிலையில் எலிமினேஷனுக்கு பின் ரவீனா முதல் முறையாக இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். அதில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
மேலும் "என்னுடைய behavioral shortcomings இருந்தால் அதை நான் மாற்றிக்கொள்கிறேன். உங்க எல்லாரோட feedbackஸ் நான் மனசார என்ட ஏத்துக்கிறேன்" என ரவீனா பதிவிட்டு இருக்கிறார்.