பிக் பாஸ் 6 ராபர்ட் மாஸ்டர் மகள் இவர்தானா? வைரலாகும் போட்டோ இதோ
பிக் பாஸ்
பிக் பாஸ் ஆறாம் சீசன் தற்போது பரபரப்பான இரண்டு வாரங்களை கடந்து இருக்கிறது. அதில் முதல் எலிமினேஷனாக சாந்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறது. மேலும் ஜிபி முத்து அவரது மனநிலை சரியில்லை என தொடர்ந்து கேட்டு வந்ததால் அவரையும் பிக் பாசில் இருந்து வெளியில் அனுப்பி இருக்கிறார்கள்.
மேலும் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தங்களது கதைகளையும் கூறி இருந்தார்கள். அதனால் மொத்த வீடும் கண்ணீரில் மூழ்கி இருந்தது.

ராபர்ட் மாஸ்டர் மகள்
ராபர்ட் மாஸ்டர் தன் கதையை சொன்ன போது தான் இளம் வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டது மட்டும் அதன் பின் 18 வயதில் ஓடிப்போய் காதல் திருமணம் செய்தது உள்ளிட்ட விஷயங்களை கூறினார். மேலும் தன் முதல் மனைவி குழந்தை பிறந்ததும் தன்னை விட்டு சென்றுவிட்டதாக கூறிய அவர் தனது சொந்த மகளுக்கு கூட நான் தான் அப்பா என தெரியாது என கண்ணீருடன் கூறினார்.
மகளை நான் சில முறை மட்டுமே பார்த்திருக்கிறேன், அவர் என்னை அங்கிள் என்று தான் அழைத்தார் என ராபர்ட் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது ராபர்ட் மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் அவரது மகள் போட்டோவை முன்பே வெளியிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது, அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜி.பி. முத்துவின் மகன்.. இதனால் தான் வெளியேறினார்
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri