பிக் பாஸ் சீசன் 9-ல் வரவுள்ள புது ரூல்ஸ்.. சூடுபிடிக்கப்போகும் நிகழ்ச்சி! என்ன?
விஜய் டிவியில் மக்கள் மத்தியில் மிகவும் பாப்புலர் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். 100 நாட்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.
கலாட்டா, சண்டை, வாக்குவாதம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விளையாட்டு என எல்லாம் கலந்த கலவையாக வலம் வரும் இந்த நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
8-வது சீசனை தொகுத்து வழங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்நிலையில், நிகழ்ச்சி மீதான விறுவிறுப்பை கூட்டும் விதமாக புத்தம் புது ரூல்ஸ் இந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
மாஸ் எலிமினேஷன்:
இந்த மாஸ் எலிமினேஷன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு போட்டியாளர்கள் கூண்டோடு எலிமினேட் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதாம். இதனால் போட்டியாளர்கள் யாரும் சேஃப் ஜோனில் இருக்க முடியாது.
லைவ் ஓட்டிங்:
பிக் பாஸ் வீட்டில் நடத்தப்படும் டாஸ்க்கில் ஆடியன்ஸ் தங்களுக்கு பிடித்த நபருக்கு வாக்கு செலுத்தலாம். இறுதியில் யாருக்கு அதிக வாக்கு கிடைத்திருக்கிறதோ அந்த நபருக்கு டாஸ்கில் அட்வாண்டேஜ் வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
சீக்ரெட் ரூம்:
9-வது சீசனில் மாஸ் எலிமினேஷன் நடைபெற இருப்பதால் அதில் சிலர் சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்படவும் வாய்ப்பு இருக்கிறது.