முத்துக்குமரனுக்கு ஆதரவாக சாச்சனா வெளியிட்ட பதிவு.. புகைப்படத்தை பாருங்க
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 10 வாரங்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதுவரை 9 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த வாரம் ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது 15 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கடந்த வாரம் வெளியேறிய சாச்சனா, வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது, முத்துக்குமரனிடம் கோப்பையை வெல்ல வேண்டும் அதற்காக உன்னுடைய கேம்-ஐ விளையாடு என கூறிவிட்டு சென்றார்.
இருவரும் அண்ணன் தங்கை போல் பழகி வந்த நிலையில், இதுவரை நிகழ்ச்சியில் மற்றவர்களுக்காக கண்களாக முத்துக்குமரன் சாச்சனா வெளியேறும் பொழுது அழுதார்.
சாச்சனா வெளியிட்ட பதிவு
இந்த நிலையில், தற்போது சாச்சனா வடபழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், முத்துக்குமரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் #Kumara என பதிவு செய்திருக்கிறார்.
இதோ நீங்களே பாருங்க..