விக்ரம் படத்தில் பணிபுரிந்துள்ள முக்கிய பிக்பாஸ் பிரபலம், யார் தெரியுமா?
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.
இப்படத்தில் அவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
மேலும் நேற்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உடன் இருக்கும் விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டி லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அவரின் பதிவில் "கமல் சார் உடன் விக்ரம் படத்தில் பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, நடன இயக்குனராக இப்படம் எனது வாழ்க்கையில் மையில்கலாக அமையும்" என தெரிவித்துள்ளார்.