பிக் பாஸ் சஞ்சீவ் நடிகர் விஜயகுமார்க்கு நெருங்கிய உறவினரா? பலருக்கும் தெரியாத தகவல்
பிக் பாஸ் 5ல் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் சஞ்சீவ். அமீர் டிக்கெட் டு ஃபினாலே ஜெயித்த நிலையில், சஞ்சீவ் எலிமினேஷன் எதிர்பார்த்த ஒன்று தான் என பிக் பாஸ் ரசிகர்களே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சஞ்சீவ் பற்றி தெரியாத பல விஷயங்களை அவரது மனைவி ப்ரீத்தி தெரிவித்து உள்ளார். சஞ்சீவ் டிக்கட் டு finale ஜெயிக்கவில்லை என்றால் அடுத்த வாரமே வெளியில் வரவேண்டும் என தான் ஆசைப்பட்டதாகவும், அதன் படியே நடந்துவிட்ட்டது என்றும் அவர் கூறினார்.
மேலும் சஞ்சீவ் விஜயகுமார்குடும்பத்திற்கு உறவு என்பதையும் அவர் கூறி இருக்கிறார். மறைந்த நடிகை மஞ்சுளா சஞ்சீவின் சொந்த சித்தி என்ற விவரத்தையும் ப்ரீத்தி தெரிவித்து உள்ளார்.
அவர்கள் நெருக்கமாக இருந்தாலும் அதை பெரிதாக வெளியில் காட்டிக்கொள்வதில்லை என்றும் அவர் கூறி உள்ளார்.