பிக்பாஸ் வீட்டில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்ற போட்டியாளர்கள், பரபரப்பான ப்ரோமோ...
தமிழ் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அண்மையில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு வீட்டிற்குள் அனுப்பப்பட்டனர்.
மேலும் நிகழ்ச்சி ஆரம்பமாகி மூன்று நாள் ஆகியுள்ள நிலையில் தினமும் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே தமிழ் பிக்பாஸ் தொடங்கபட்ட நாளில் தான், ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 15-ன்னும் தொடங்கபட்டது. இதையும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் தான் ததொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்கின் போது ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளனர்.
இதோ அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்