பிக் பாஸ் சீசன் 5வின் முதல் நாள் எப்படி சென்றது.. Day 1
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் பிக் பாஸ் சீசன் 5 நேற்று பிரமாண்டமாக துவங்கியது.
இதில், இசைவாணி, ராஜு ஜெயமோகன், அபிஷேக் ராஜன், பிரியங்கா, பவனி ரெட்டி உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இன்று பிக் பாஸ் 5 வீட்டின் முதல் நாள் காலை, கலகலப்பான பாட்டுடன் துவங்கியது.
பின், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வந்த நிலையில், சமையல் செய்வது, பாத்திரம் துலக்குவது, வீட்டை சுத்தம் செய்வது மற்றும் பாத்ரூம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக்கு நான்கு தலைவர்களால் நான்கு டீம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காலையில் இருந்து இரவு வரை கலகலப்பாக முதல் நாள் சென்றது.
முதல் நாள் என்பதினால் எந்த ஒரு சச்சரவும் இல்லாமல் சென்ற பிக் பாஸ் 5 வீட்டில், சண்டை எப்போது ஆரம்பிக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.