என் கணவர் இறந்தபோ நான் அழுகவில்லை.. கண்கலங்கி பவனி ரெட்டி
விறுவிறுப்பாக துவங்கிய பிக் பாஸ் சீசன் 5ன் ஐந்தாம் நாள் இன்று. எபிசோடின் துவக்கத்தில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரை செல்வி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த வாரம் Luxary Budget டாஸ் என்பதினால், ஒவ்வொரு போட்டியாளரும், தான் கடந்து வந்த பாதையை கூறி வருகிறார்கள். அந்த வரிசையில், இன்று பவனி ரெட்டி மற்றும் Iykki berry என இரு போட்டியாளர்கள் தங்களது வாழ்க்கையில் நடத்த கசப்பான அனுபவங்களை கூறினார்.
அதில் முதல் ஆளாக Iykki berry, தனது வாழ்க்கையில் தன் தாய் தந்தையினால் அனுபவித்த கஷ்டங்களை கூறினார். மேலும், தான் ஒரு தமிழ் Rap பாடகி என்பதினால், பல இடங்களில் திறமை இருந்தும் நிராகரிக்கப்பட்டதாக Iykki berry கூறினார். அதே போல், தென்னிந்திய சிறந்த Rap பாடகி என்ற விருதை கிரண் பேடி கையால் வாங்கியதையும் Iykki berry கூறினார்.
இவரை தொடர்ந்து பவனி ரெட்டி, தனது காதல் வாழக்கை குறித்து பேச துவங்கினார். அதன்பின் தனது வீட்டை எதிர்த்து வெளியேறி தன் காதலரை திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினார். சில ஆண்டுகள் நன்றாக சென்ற வாழக்கையில் ஒரு நாள் தீடீரென தனது கணவருடன் ஏற்பட்ட சிறு பிரச்சனையால், பவனியின் கணவர் தற்கொலை செய்துகொண்டார் என்று பவனி கூறினார். அதன்பின், பல பிரச்சனைகளை தாண்டி சின்னத்தம்பி சீரியலில் நடிக்க துவங்கினேன். அதன்பின் தற்போது மீண்டும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்துருகிறேன் என்று கூறினார் பவனி.