பிக் பாஸ் சீசன் 5 வாய்ப்பை நிராகரித்த நடிகர் சந்தோஷ், என்ன காரணம் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5, தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.
மேலும் பிக் பாஸ் சீசன் 5-யில் சார்பட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சந்தோஷ் கலந்து கொள்வதாக கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவரிடம் பேசியபோது அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆயத்தமாகிய சூழலில்தான் இயக்குநர் மிஷ்கினிடம், தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் சந்தோஷ். மேலும் மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் சந்தோஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மிஷ்கின் "படம் ரிலீசாக இருக்கிற சூழலில் யாரைக் கேட்டு நீங்க இந்த முடிவை எடுத்தீங்க. அந்த நிகழ்ச்சியில போன சிலர் என்ன ஆனாங்க தெரியாதா? அங்க போய் பெயரைக் கெடுத்துக்கிட்டா அது படத்தைப் பாதிச்சிடும்.
அதனால நீங்க அந்த ஷோவுக்குப் போய்த்தான் ஆகணும்னா, படத்துல உங்க போர்ஷனை ட்ரிம் பண்றதைத் தவிர எனக்கு வேற வழி தெரியாது" என ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளார் மிஷ்கின். இதனால் கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வரவில்லை எனச் சொன்னாராம் சந்தோஷ்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri