பிக்பாஸ் 5 பிரபலத்தின் படத்தில் வில்லியாக நடித்துள்ள தொகுப்பாளினி DD ! எந்த படத்தில் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகி இருப்பவர் தான் வருண்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஹீரோவாக முன் பப்பி, Joshua இமைபோல் காக்க உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்படத்தில் அமைந்துள்ள ஒரு பாடலை நடிகர் சிம்பு தற்போது வெளியிட்டுள்ளார். அதில் முக்கிய பிரபலம் ஒருவர் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
ஆம், அதில் தொகுப்பாளினி DD கையில் Gun-உடன் வந்துள்ளார். எனவே அதை பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் அவர் வில்லியாக நடித்து இருக்கலாம் என கூறிவருகின்றனர்.
