பிக்பாஸ் 6வது சீசன் எப்போது தொடங்குகிறது தெரியுமா?- சிம்புவா அல்லது வேறு நடிகரா?
பிக்பாஸ் பிரம்மாண்டமாக தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
முதல் சீசனிற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தாலும் அடுத்தடுத்த சீசன்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துவிட்டது, இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்றொரு நிகழ்ச்சியும் நடந்தது, இதில் இதுவரை 5 சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்றார்கள்.
இந்த அல்டிமேட் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக களமிறங்கினார் சிம்பு.
பிக்பாஸ் 6வது சீசன்
பிக்பாஸ் 5வது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி 2022ம் வருடம் முடிந்தது. இந்த 5வது சீசன் வெற்றியாளராக ராஜு ஜெயமோகன் தேர்வானார்.
தற்போது பிக்பாஸ் 6வது சீசன் இந்த வருட இறுதியில் அக்டோபர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது, சிம்புவே நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பார் என்கிறார்கள்.
பிரியங்கா சோப்ராவுக்கு கார் பரிசளித்த அவரது கணவர்- காரின் விலை தெரியுமா?