அடிதடி சண்டை, நிறுத்தப்பட்ட பிக்பாஸ், இனி நிகழ்ச்சி கிடையாது, வைரலாகும் வீடியோ... பரபரப்பான சம்பவம்
பிக்பாஸ்
பிக்பாஸ், தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் சில வருடங்களுக்கு முன் அப்படி என்ன நிகழ்ச்சி என பார்க்க துவங்கினார்கள்.
ஆனால் இப்போது பழக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. கடைசியாக தமிழில் பிக்பாஸ் 8வது பிரம்மாண்டத்தின் உச்சமாக நடந்து முடிந்தது, இந்த சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார்.

அரிவாளுடன் வந்து மிரட்டிய ஜனனி, ஆடிப்போய் புதிய பிளான் போட்ட குணசேரகன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
அடுத்து 9வது சீசன் எப்போது தொடங்கும், யார் போட்டியாளராக வரப்போகிறார்கள் என்பதை தாண்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்பதை காண தான் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி
மலையாளத்தில் கடந்த 3ம் தேதி 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 7வது சீசன் தொடங்கப்பட்டது.
முதல் வாரம் சிறப்பாக செல்ல 2வது வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி வந்தது. 2வது வாரத்தில் போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் போட்டியாளர்கள் இடையே வாக்குவாதம் அடிதடியில் முடிந்துள்ளது.
ஆண் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொள்ள கொஞ்சமும் எதிர்ப்பார்க்காத பிக்பாஸ் குழுவினர் அடிதடியை நிறுத்தியுள்ளனர்.
தற்போது பிக்பாஸ் தரப்பில் வந்த புரொமோவில், போட்டியாளர்கள் அடித்துக் கொண்டதால் இந்த சீசன் நிறுத்தி வைக்கப்படுவதாக பிக்பாஸ் தெரிவிக்கிறார்.
பிக்பாஸிடம் இருந்து வந்த இந்த புரொமோ ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
