ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் பிக்பாஸ் 9வது சீசன் எப்போது ஆரம்பம்... இந்த CWC போட்டியாளர் உள்ளாரா?
பிக்பாஸ் 9
குபு சிகு குபு சிகு பிக்பாஸ் என ஆரம்பித்த நாள் முதல் இந்நிகழ்ச்சிக்கான ரசிகர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளார்.
ஒவ்வொரு சீசனின் TRPயும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. கடைசியாக 8வது சீசன் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பானது.
இதில் ஸ்பெஷல் என்னவென்றால் 7 சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்க கடைசி சீசன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார், இதனாலேயே கடைசி சீசனிற்கு ஒரு எதிர்ப்பார்ப்பு இருந்தது.
அடுத்த சீசன்
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் 9வது சீசன் பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில் அடிபடுகிறது.
அப்படி ஜியோ ஹாட் ஸ்டார் நிர்வாகி ஒருவர் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் விஜய் சேதுபதி தான் தொகுப்பாளர் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி நமக்கு கிடைத்த தகவல்படி பிக்பாஸ் 9வது சீசன் அக்டோபர் 5ம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கெனவே நாம் சமூக வலைதளங்களில் வலம்வரும் பிக்பாஸ் 9வது சீசனில் போட்டியாளர்களின் லிஸ்ட்டை வெளியிட்டோம்.
தற்போது இந்த லிஸ்டில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் உமைர் பிக்பாஸ் 9வது சீசனில் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri
