பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5.
ஆரம்பத்தில் மிகவும் ஸ்லொவ்வாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான டாஸ்க் மூலமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் சின்ன பொண்ணு வெளியேறியிருந்தார். அவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி அபிநய், அக்ஷரா ரெட்டி, சிபி, இசைவாணி, ஐக்கி பெரி, நிரூப், மதுமிதா, பவனி ரெட்டி, சுருதி உள்ளிட்டோர் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற நாமினேட் ஆகியுள்ளனர்.
மேலும் இவர்களில் குறைந்த வாக்குகளுடன் அபிநய் மற்றும் சுருதி கடைசி இரண்டு இடங்களில் உள்ளனர். எனவே இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.