விஜய் டிவி பிரபலத்துக்கு பிக்பாஸ் அனுப்பிய பரிசு- யாருக்கு என்ன அனுப்பியுள்ளார் பாருங்க, வீடியோ இதோ
பிக்பாஸ் 7
மக்களின் நிறைய எதிர்ப்பார்ப்புகளுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ் 7.
கமல்ஹாசன் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா வெளியேறிவிட்டார், அடுத்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருந்த நேரத்தில் தன்னால் இனி பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாது என கூறி பவா செல்லதுரை வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
பிக்பாஸ் கொடுத்த பரிசு
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நபரான நாஞ்சில் விஜயனுக்கு பிக்பாஸ் ஒரு பரிசு கொடுத்துள்ளாராம். அவரே அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
உடனே ரசிகர்கள் அவர் பிக்பாஸ் 7வது சீசனின் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக வர வாய்ப்பு இருப்பதாகவும் பேசி வருகின்றனர்.