பின்னுக்கு தள்ளப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, முந்திய சன் டிவி சீரியல்.. குறைகிறதா பிக்பாஸ் மோகம்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 5, இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பனால் மற்ற தொலைக்காட்சிகளை மக்கள் அவ்வளவாக கண்டுகொள்ளமாட்டார்கள்.
இதனிடையே முந்திய பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விடவும் தற்போது ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் பிக்பாஸ் சீசன் 5, நிகழ்ச்சியின் மீது ரசிகர்கள் ஆர்வம் குறைவாகவே உள்ளது.
ஆம் இந்த சீசன் தொடக்கம் முதலே ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி விறுவிறுப்பு குறைவாகவே உள்ளது என கூறிவந்தனர். ஆனால் டாஸ்க் மூலமாக மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினர் பிக்பாஸ் குழு.
இதனிடையே தற்போது கடந்த வார TRP வெளியாகியுள்ளது, அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியை விட சன் டிவி-யின் பூவே உனக்காக தொடர் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான மோகம் குறைந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.