பிக் பாஸ் வீட்டை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்.. கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஹிந்தி தொடங்கி தமிழ் வரை இந்த நிகழ்ச்சியை பார்க்க பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது தமிழில் பிக் பாஸ் 9ம் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அது போல கன்னடத்திலும் தற்போது 12வது சீசன் நடைபெற்று வருகிறது.
இழுத்து மூடிய அதிகாரிகள்
இந்நிலையில் கன்னட பிக் பாஸ் வீட்டில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் waste ஆகியவை சரியாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து போராட்டம் நடந்த நிலையில் அங்கு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என சொல்லி உடனே அந்த அரங்கத்தை மூட உத்தரவிட்டு இருக்கின்றனர். அதனால் பிக் பாஸ் கன்னடா ஷோவுக்கு தடங்கல் ஏற்பட்டு இருக்கிறது.
ஷோ பாதியில் நிற்பதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.