பிக் பாஸ் ஷிவானிக்கு குவியும் பட வாய்ப்புகள்.. தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பு
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்து, பின் இயக்குனராகவும் நடிகராகவும் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே. பாலாஜி.
இவர் நடிப்பில் வெளிவந்த எல். கே. ஜி மற்றும் இயக்கி, நடித்து வெளிவந்த மூக்குத்தி அம்மன் இரு திரைப்படங்கள் சூப்பர்ஹிட்டானது.
இதனை தொடர்ந்து விரைவில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஆர்ஜே பாலாஜி.
இப்படத்தில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் நாயகியாக நடிக்கிறார்.
அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஷிவானி.
மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்திலும், பொன்ராம் இயக்கும் படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.