பிக்பாஸ் நிகழ்ச்சியில் நானா ! மௌனம் கலைத்த பிரபலம், வீடியோவுடன் இதோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.
மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே பிக்பாஸ் 4 வது சீசனில் கலந்துக்கொண்ட சம்யுக்தாவின் நெருங்கிய தோழி பிரதாய்னி சுர்வா பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சம்யுக்தாவின் தோழியும், மாடலுமான பிரதாய்னி சுர்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “உண்மையான போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்" என வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக “உங்கள் அன்பிற்கு நன்றி! நான் இங்குதான் இருப்பேன், இளநீரைக் குடித்துக்கொண்டு” என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.