வாரிசு
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் என்பதால் ஷூட்டிங்கை வேகமாக முடிக்க குழுவினர் வேகமாக இறுதி கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இது முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் பற்றிய படம் என்பதால் விஜய்யின் குடும்ப உறுப்பினர்களாக பல முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
பிக் பாஸ் புகழ் சம்யுக்தாவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறாராம். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் விஜய்யை பற்றி வியந்து பேசி இருக்கிறார்.
விஜய் பற்றி பேசிய சம்யுக்தா
விஜய் எல்லோரிடமும் ப்ரென்ட்லியாக பேசுவார். தவறாமல் எல்லோருக்கும் ஹாய் சொல்லுவார். அவர் பெரிய ஸ்டார் என்பது போல காட்டிக்கொள்ளவே மாட்டார். எப்போது சகஜமாக ஒரு மூலையில் அமர்ந்திருப்பார்.
மேலும் அவர் குடையை அவரே பிடித்து இருப்பார் என்றும் ஆச்சர்யத்துடன் தெரிவித்து இருக்கிறார்.
Also Read: இதுவரை இல்லாதளவு மிக பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட தமிழ் படம் வாரிசு தான்! அதிரடி அப்டேட்

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
