நிகழ்ச்சியில் கண்கலங்கிய வேல்முருகன்.. வெளிவந்த வீடியோ
விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சி என்று, சொன்னால் அது பிக் பாஸ் தான். இதில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சீசன் 5 நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் டிவியில் பிக் பாஸ் முந்தைய பிக்பாஸ் சீசன்களின் பிரபலங்களை வைத்து ஸ்பெஷல் ஷோ ஒன்றை நடத்தியுள்ளது.
இதில் பிக்பாஸ் பிரபலங்கள் தங்கள் கணவன், மனைவிகளுடன் பங்கேற்கின்றனர். அந்த வகையில், சினேகன்- கன்னிகா , அனிதா சம்பத் - பிரபாகரன், வேல் முருகன் - கலா, உள்ளிட்ட 7 ஜோடிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் சமீபத்தில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில் வேல்முருகன் பேசுயபொழுது, 'ஒவ்வொரு மனைவிக்கும் அவங்களோட புருஷன் ஸ்டைலா, கெத்தா இருக்கணும்னு ஆசை இருக்கும்.
எனக்கு அப்படி எல்லாம் இருக்க தெரியாது. ஆனால், என் மனைவி என்னை அப்படியே ஏத்துக்கிட்டா' என்று கண்கலங்கி பேசியுள்ளார்.