லியோ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜுடன் இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள்.. புகைப்படத்துடன் இதோ
லியோ
விஜய்யின் நடிப்பில் வெளிவந்த லியோ படம் விமர்சன ரீதியாக பின்தங்கி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை விஜய்யின் நடிப்பில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தததே இல்லை. இதுவே முதல் முறை என்பதால் இந்த வசூல் சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருவது மட்டுமின்றி பல இடங்களில் லாபமும் கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.
இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள்
இந்நிலையில், லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டு பிக் பாஸ் பிரபலங்கள் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
அவர்கள் வேறு யாருமில்லை பிக் பாஸ் 6ல் போட்டியாளராக வந்த ஜனனி மற்றும் பிக் பாஸ் 7ல் கலந்துகொண்டிருக்கும் மாயா இருவரும் தான் லோகேஷுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் ஜனனி, விஜய்யின் காஃபி ஷாப்பில் வேலைபார்க்கும் பணிப்பெண் கதாபாத்திரத்திலும், மாயா LCU கனெக்டில் வரும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri