டேஞ்சர் ஸோனில் முக்கிய போட்டியாளர்! இந்த வார எலிமினேஷன் இவர்தான்?
இன்னும் ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் முடியப்போகிறது. அதனால் தற்போது இறுதிக்கட்ட பரபரப்பு வரத்தொடங்கி இருக்கிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் தற்போது வீட்டுக்குள் வந்து பேச தொடங்கி இருக்கிறார்கள்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க இந்த வாரம் நாமினேஷனில் ஆறு முக்கிய போட்டியாளர்கள் இருக்கின்றனர். பிரியங்கா, சிபி, நிரூப், வருண், அக்ஷரா, பாவனி ஆகியோர் தான் நாமினேஷன் லிஸ்டில் இருக்கின்றனர்.
முதல் நாளில் பாவனி தான் குறைந்த வாக்குகள் பெற்று இருந்தார். தற்போது புதன்கிழமை ஆகிவிட்ட நிலையில் நிரூப் தான் குறைந்த வாக்குகள் தான் பெற்று இருக்கிறார்.
இது அதிகாரபூர்வமற்ற வாக்கெடுப்பு விவரங்கள் என்றாலும், நிரூப் தான் டேஞ்சர் ஸோனில் இருப்பது ரசிகர்கள் மனநிலையில் தெரிகிறது.
நிரூப் தான் வெளியே போவாரா அல்லது இன்னும் இரண்டு நாட்களில் வாக்குகள் நிலை மாறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்..