முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம் பேட்ஜ் என போட்டியாளர்களுக்கு அவர்களுக்கு பிடித்த நிறங்களை தேர்ந்தெடுத்தனர்.
இதில் குறைவான ஆட்கள் நீலம் பேட்ஜை தேர்ந்தெடுத்ததன் காரணமாக, பிக் பாஸ் வீட்டிற்குள் சூப்பர் டீலக்ஸ் அறை அவர்களுக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழக்கமான படுக்கையறை கிடைத்தது. வீட்டிற்குள் சென்றவுடனே அனைவரும் தண்ணீர் டாஸ்க் வழங்கப்பட்டது.
இதனால் வீட்டிற்குள் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிலருக்குள் மோதலும் வந்தது. வாக்குவாதம் செய்தனர். என்னடா இது, வீட்டிற்குள் சென்றவுடனே இப்படியா என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பேசி வருகிறார்கள்.
முதல் ப்ரோமோ
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ வெளியாகியுள்ளது. இதில், 'ஒரு நாள் கூத்து' என்கிற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இவரால் ஒரு நாள் தான் தாக்குப்பிடிக்க முடியும், அதற்கு மேல் இவரால ஒன்றுமே பண்ணமுடியாது என நீங்கள் எண்ணும் நபரை போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.
அதன்படி, போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை கூறி, ஒருவரை ஒருவர் தேர்வு செய்கின்றனர். ஒருவேளை இப்படியொரு டாக்ஸ் வைத்து, இதிலிருந்து அதிக வாக்குகளை பெரும் நபர் முதல் நாளே எலிமினேட் செய்யப்படுவாரா அல்லது வேறு எதாவது ட்விஸ்ட் இருக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதோ ப்ரோமோ வீடியோ பாருங்க: