காருக்குள் ஏற்பட்ட சண்டை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா பிக்பாஸ் 9 பிரபலம்... ஷாக்கிங் தகவல்
பிக்பாஸ் 9
பிக்பாஸ் 9, பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் கடந்த வருடம் அக்டோபர் 5ம் தேதி தொடங்கிய நிகழ்ச்சி.
கொஞ்சம் பரீட்சயமானவர்களும், சிலர் மக்களிடம் பிரபலம் ஆகாத போட்டியாளர்களும் இதில் இருந்தனர். விஜய் சேதுபதி 2வது முறையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இந்த 9வது சீசன்.
ஆரம்பம் என்னவோ மிகவும் அமர்க்களமாக தான் இருந்தது, ஆனால் போக போக நிகழ்ச்சிக்கான சுவாரஸ்யம் மக்களிடம் குறைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

மருத்துவமனை
எல்லா பிக்பாஸ் சீசனிலும் ஒரு காதல் கதை வருவது வழக்கம் தான். அப்படி இந்த சீசனில் கம்ருதீன்-பார்வதி காதல் கதை ஒருவிதமாக செல்கிறது.
சமீபத்திய ஷோவில் இவர்களின் காதல் கதை குறித்த தனது கருத்தை பார்வதியிடம் சாண்ட்ரா கூற அதை கம்ருதீனிடம் போட்டுக் கொடுத்துவிடுகிறார். இதனால் கோபமடைந்த கம்ருதீன், சாண்ட்ராவை ஃபிராடு என திட்ட சண்டை வருகிறது.

இன்றைய எபிசோடில் கார் டாஸ்க் ஒன்று நடக்கிறது, பார்வதி, கம்ருதீன், சாண்ட்ரா ஆகியோர் அருகருகே அமர்ந்திருக்க கம்ருதீன் சாண்ட்ராவிடம் சண்டை போடுகிறார்.
உன்னைமாதிரி நான் இங்க பொறுக்கித்தனமா பண்ணிட்டு இருக்கேன் என கம்ருதீனிடம் சாண்ட்ரா சொல்ல, பெரிய இவ, மூஞ்ச பாரு என சாண்ட்ராவிடம் தரக்குறைவாக பேசுகிறார் கம்ருதீன்.
இந்த சண்டையில் சாண்ட்ரா பேனிக் அட்டாக் வந்து மயக்கம் போட்டு விழுந்திருக்கிறார். இதனால் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர், சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரப் பட்டிருக்கிறார்.
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri