Red Card பிறகு சாண்ட்ரா காலில் விழுந்த கம்ருதீன், பார்வதி என்ன செய்தார் தெரியுமா?... வீடியோ இதோ
பிக்பாஸ் 9
சமூக வலைதளங்கள் திறந்தாலே இரண்டு நபர்களை பற்றிய பரபரப்பு பேச்சு தான் உள்ளது.
பிக்பாஸ் 9வது சீசனில் விளையாடிய கம்ருதீன்-பார்வதி செய்யும் விஷயங்கள் மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் சேர்ந்து சாண்ட்ராவை கீழே தள்ளிவிட்டது, கம்ருதீன் அசிங்கமாக பேசியது எல்லாம் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது.
அந்த எபிசோட் முடிந்ததில் இருந்து ரசிகர்கள், பிரபலங்கள் என கோபத்தை வெளிப்படுத்தி வீடியோ வெளியிட்டனர்.

புரொமோ
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் புரொமோக்கள் வெளியாக அதில் கம்ருதீன்-பார்வதிக்கு Red Card கொடுக்கப்பட்டது.
இன்னொரு புரொமோவில், விஜய் சேதுபதி வந்த சீன் முடிந்ததும், திவ்யா கம்ருதீனை பார்த்து நான் சொன்னேன், அவள் Trigger செய்கிறார் உன்னை என்று நீ போய் தொலைக்காட்சி பார் என்கிறார்.

வினோத்தும் இதையே கம்ருதீனிடம் கூறுகிறார்.
இவர்கள் பேசியதை கேட்ட பிறகு கம்ருதீன், சாண்ட்ரா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார், பார்வதி நான் செய்தது தவறு என வாய் வார்த்தைக்காக சொல்வது போல் பேசுகிறார்.