பிரம்மாண்டமான பிக்பாஸ் 9வது சீசன் எப்போது தொடக்கம்... வந்ததே அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிக்பாஸ்
ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பிரதர் என்ற நிகழ்ச்சி தான் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார், கமல்ஹாசனை ஸ்டைலை பாலோ செய்யாமல் தனக்கு தோன்றிய வழியில் நிகழ்ச்சியை கொண்டு சென்றார்.
9வது சீசன்
கடந்த சில மாதங்களாக பிக்பாஸ் 9வது சீசன் என்ற பேச்சு அடிபட்டு போட்டியாளர்கள் கூட இவர்கள் தான் என நிறைய தகவல்கள் வலம் வருகிறது. நாமும் அந்த தகவல்களை பதிவிட்ட வண்ணம் உள்ளோம்.
தற்போது அதிகாரப்பூர்வமாக வந்துள்ள தகவல் என்னவென்றால் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் 9வது சீசன் ஆரம்பமாக உள்ளதாம்.