பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு முக்கிய போட்டியாளர்.. டபுள் விஷன், அதிர்ச்சியில் ரசிகர்கள்
விறுவிறுப்பாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80 நாட்களை கடந்துள்ளது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக் பாஸ் சீசன் 5 தற்போது டாப் 10 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது.
இதில் யார் வெல்ல போகிறார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஏனென்றால், யார் அந்த வெற்றியாளர் என்று கணிக்கமுடியாத அளவிற்கு அனைவரும் தனித்தன்மையுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற போவது யார் என்று பார்க்க, அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளது.
80 நாட்களை கடந்து வலிமையான போட்டியாளர்கள் என்று பேர் எடுத்த அக்ஷரா மற்றும் வருன் இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இந்த டபுள் எவிக்ஷன் ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதை தான் கமல் ஹாசன் அடிக்கடி, ' எதிர்பாராததை எதிர்பாருங்கள் ' என்று கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Both #Akshara and #Varun Eliminated#biggbosstamil #Biggbosstamil5 pic.twitter.com/WTJWmSBNOt
— Imadh (@MSimath) December 25, 2021