பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. பைனல் முடிந்தபின் யாருடன் இருக்கிறார் பாருங்க!
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 8ம் சீசன் தற்போது நிறைவு பெற்று இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 7 சீசன்களை விட இந்த முறை தான் அதிகம் views வந்திருக்கிறது என விஜய் டிவி தரப்பு பைனல் மேடையிலேயே தெரிவித்தனர்.
அதனால் விஜய் சேதுபதியே தொகுப்பாளராக தொடர்வார் என்றும் அறிவித்து இருக்கின்றனர். மேலும் பைனல் ஷோ முடிந்தபிறகு நடந்த பார்ட்டியில் போட்டியாளர்கள் மற்றும் பணியாற்றியவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
பிக் பாஸ் குரல்..
எல்லோரையும் கவர்ந்து வரும் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் ஆன சாஷோவும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார்.
அந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
அவர் உடன் இருப்பது சௌந்தர்யாவின் PR என்பது குறிப்பிடத்தக்கது.