ஒரு வாரம் சிறையில் இருந்த பிக்பாஸ் தர்ஷன்.. தற்போது வழக்கில் அதிர்ச்சி திருப்பம்
பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்த மாடல் என்ற அடையாளத்துடன் வந்த இவருக்கு பிக் பாஸ் பெரிய புகழை கொடுத்தது.
தற்போது சென்னையில் தங்கி அவர் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு தர்ஷனுக்கு அவர் வீட்டின் எதிரில் காரை நிறுத்திய நீதிபதியின் மகன் ஒருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
அதில் இரண்டு தரப்பும் போலீசில் புகார் அளித்து இருந்தனர். அதில் நீதிபதி மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத போலீஸ், தர்ஷனை மட்டும் கைது செய்து ரிமாண்ட் செய்தது.
ஒரு வாரம் சிறையில் இருந்த தர்ஷன் அதன் பின் ஜாமினில் வெளியில் வந்தார்.
சமரசம்
இந்நிலையில் தற்போது தர்ஷன் மற்றும் நீதிபதி மகன் தரப்பு வழக்கை சமரசம் செய்துகொண்டிருக்கின்றனர்.
அதனால் இரண்டு தரப்பின் வழக்குகளும் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.