அடடா பிக்பாஸ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி, நீங்களும் போட்டியிட ரெடியா?... என்ன விஷயம்?
பிக்பாஸ்
எதாவது ஒரு மொழியில் ஷோ ஒன்று ஹிட்டாகிவிட்டால் அது உடனே அடுத்தடுத்து பல மொழிகளில் தொடங்கப்படும்.
அப்படி ஹாலிவுட்டில் ஹிட்டடித்த ஷோவான பிக்பாஸ் இந்தியா பக்கம் வர முதலில் ஹிந்தியில் தொடங்கப்பட்டது. அங்கு இந்த ஷோவிற்கு செம ரெஸ்பான்ஸ் 15 எபிசோடுகளுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி தென்னிந்தியா பக்கம் வர முதலில் தமிழில் தொடங்கப்பட்டது, பின் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ஒளிபரப்பாக தொடங்கியது.

நியூ ஷோ
இப்போது 2026 தொடங்கிய 6 மாதத்தில் அடிஎடுத்து வைத்துவிட்டோம். இதனால் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் பிக்பாஸ் குறித்த பேச தொடங்க இப்போது ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது.

அதாவது இதுநாள் வரை பிரபலங்கள், சமூக வலைதளங்களில் பிரபலமானவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வந்தார்கள். தற்போது Common Man கூட பிக்பாஸில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு வந்துள்ளது.
அதற்கான புரொமோவும் விஜய் சேதுபதி இடம்பெற தற்போது வெளியாகியுள்ளது. இதோ,