இந்த வாரம் டபுள் Eviction.. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் இரு போட்டியாளர்கள்..
20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள, பிக் பாஸ் சீசன் 5வில் இருந்து இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
நடியா, அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஜக்கி பெரி என 8 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் அபிஷேக் ராஜா மட்டும் முதல் முறை வெளியேறி பின், வைல்ட் கார்ட் என்ட்ரியில் வந்து, கடந்த வாரம் மீண்டும் வீட்டை விட்டு இரண்டாவது முறை வெளியேறினார்.
மேலும் இந்த வாரம் நாமினேஷலில், அபினை, நிரூப், இமான், சிபி, அக்ஷரா, அமீர் என 6 நபர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் முதல் முறையாக டபுள் Eviction இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது நிரூப் மற்றும் இமான் அண்ணாச்சி இருவரும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல் அண்ணாச்சிக்கு பதில், வீட்டை விட்டு வெளியேற சிபிக்கும் பெரிதும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் வார இறுதி எபிசோடில் என்ன நடக்கிறது என்று..