இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. சோகத்தில் ரசிகர்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தற்போது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், எதிர்பாராத பல திருப்பங்களும் பிக் பாஸ் 5ல் நடைபெற்று வருகிறது.
இதுவரை நாடியா, நமிதா மாரிமுத்து, சின்னப்பொண்ணு, சுருதி மற்றும் மதுமிதா, இசைவாணி என 6 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் சமீபத்தில் அமீர் மற்றும் சஞ்சீவ் என இரு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
கமல் ஹாசன் அவரகள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் இருப்பதால், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் இந்த வாரம் நாமினேட் ஆன போட்டியாளர்களில் இருந்து 'ஜக்கி பெரி' பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
'ஜக்கி பெரி' இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளது, அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.