பிக் பாஸ் முதல் டபுள் எவிக்ஷன்.. இந்த வாரம் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பிக் பாஸ் 9
கடந்த மாதம் ஆரம்பமான பிக் பாஸ் 9 தற்போது 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில், கடந்த வாரம் அதிரடியாக 4 புதிய வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.
ஏற்கனவே உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்சுக்கு செம்ம டப் கொடுத்து விளையாடி வருவதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் சில சஸ்பென்ஸ் டாஸ்க் மூலம் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்த சில விஷயங்களை செய்து வருகிறார்.

யார் தெரியுமா?
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் வியானா, ரம்யா ஜோ, துஷார், பார்வதி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதீன், திவாகர், வினோத், பிரவீன், சபரி, எஃப் ஜே, கெமி ஆகிய 12 பேர் நாமினேட் ஆகி இருந்தனர்.
இதில் இருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். அதாவது, முதல் ஆளாக இந்த வாரம் எலிமினேட் ஆனது ரம்யா ஜோ. அவருக்கு அடுத்து இரண்டாவதாக துஷார் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
